திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் உள்ள போயி 14 மணி நேரமாச்சே... பொதுமக்கள் புலம்பல் - pray for sujith
திருச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்துக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுஜித் உள்ள போயி 14 மணி நேரமாச்சே...
இந்நிலையில் குழந்தையை சுற்றியுள்ள மண் துகள்களை அகற்றுவதற்காக இரண்டு அங்கலமுள்ள குழாய் ஒன்று செலுத்தப்பட்டது. இப்போது குழாயை வெளியே எடுத்துள்ள நிலையில், குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையில் குழந்தையின் நிலை அறிந்து சுர்ஜித்தின் தாய் மயக்கமடைந்தார். அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் குழந்தை மீட்கப்படும் என்று அலுவலர்களும் அமைச்சர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Last Updated : Oct 26, 2019, 1:42 PM IST