திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் போதிய கல்லூரிகள் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் திருச்சியை நோக்கி கல்லூரிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் மாணவ மாணவியர் சென்று வர போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லை.
கல்லூரி மாணவர்களை புறக்கணித்த அரசுப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு - கல்லூரி மாணவர்
திருச்சி: கல்லூரிக்குச் செல்லும் தங்களை ஏற்றிச்செல்ல மறுப்பதால் பேருந்து நிலையத்திற்குள்ளேயே சென்று அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவ-மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு புதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் அந்த வழியில் செல்லும் பேருந்துகளும் மாணவ மாணவியரை ஏற்றிச் செல்ல மறுத்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவியர் இன்று பேருந்து நிலையத்திற்குள்ளேயே சென்று பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர். தகவலறிந்த போக்குவரத்துப் பணிமனை அலுவலர்களும் காவல் துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவியரிடம் சமரசம் செய்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவ மாணவியர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.