திருச்சி:திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் அண்ணாமலை மன்றத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய ஒற்றுமை பயணம் என்கின்ற பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திய பல தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்தார். அதில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார்.
பாரத் ஜோடோ லீடர்ஷிப்:அதனை கொண்டாடும் வகையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பாக, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்ட நிகழ்வுகளை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நடத்த இருக்கின்றோம். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்திக் கொண்டாட உள்ளோம். அந்த வகையில் இன்று யூத் காமர்ஸ் சார்பாக, பாரத் ஜோடோ லீடர்ஷிப் என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றோம்.
இளைஞர் காங்கிரஸ் சார்பாக பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்: இந்த திட்டத்தில் பங்கேற்க ஏராளமான பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவு உள்ளனர். இதன் நோக்கம், இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து அதை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பாக பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பூத் கமிட்டி அமைப்பது, மண்டல கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் சம்பவத்திற்கு ஏன் வாய் திறக்கவில்லை: கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசிய விஷயம் மிகவும் வைரல் ஆகி வருகிறது. சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களுக்கு மோடி உடனடியாக எதிர்வினையாற்றிருக்கிறார். நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், தமிழ்நாடு அமைச்சர் பேசியதற்கு உடனடியாக பதில் கொடுக்கும் மோடி, மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரு பிரச்சினை நடந்து கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை.