தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவையும் மீட்டெடுக்கப்போவதுஸ்டாலின்தான் – ஆசிரியர் கி.வீரமணி - etv news

தமிழ்நாடு மட்டுமல்ல, திமுகவையும் மீட்டெடுக்கப்போவது ஸ்டாலின்தான் என்று மணப்பாறையில் கி.வீரமணி அதிரடியாக பேசியுள்ளார்.

மணப்பாறையில் கி.வீரமணி பேச்சு
மணப்பாறையில் கி.வீரமணி பேச்சு

By

Published : Mar 22, 2021, 11:52 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ப.அப்துல்சமதை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரியார் சிலை திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேருரை ஆற்றிய திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறுகையில் ’’தேர்தலில் போட்டி என்பது இரண்டு அணிக்கும் தான்,கொள்கை கூட்டணிக்கும், கொள்கையே இல்லாத கூட்டணிக்கும்தான். இது கொள்கை கூட்டணி.

ஸ்டாலின் வரப்போறாரு, விடியலை தரப்போறாரு.. தமிழநாட்டை மீட்டெடுப்போம் என திமுகவினர் பரப்புரை கொண்டு வருகின்றனர். மீட்டெடுப்பது தமிழ்நாட்டை மட்டுமல்ல, பாஜகவிடம் அடகு வைத்துள்ள அதிமுகவையும்தான். அதிமுக தோற்றால்தான் கட்சியாவது மிஞ்சும், இல்லையேல் பாஜக வேறு திட்டம் வைத்துள்ளது” என பேசினார்.

இதையும் படிங்க: கோவை தெற்கு: நட்சத்திர வேட்பாளர் கமல் ஹாசன் வெல்வாரா?

ABOUT THE AUTHOR

...view details