ஸ்ரீரங்கம் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகச் சிறப்புடன் விளங்குகிறது.
சந்திர புஷ்கரணியில் எழுந்தருளினார் நம்பெருமாள் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகல்பத்து நிகழ்ச்சியில் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15ஆம் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல்நாளான திருமொழி திருவிழா தொடங்கியது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இராபத்து வைபவத்தில் தினமும் ஒரு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். ராப்பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான இன்று (ஜன.03) நம்பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திர புஷ்கரணியில் எழுந்தருளினார். அதன் பின்னர் அங்கு தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதையும் படிங்க:கோவிட்-19 பரவலுக்குப் பின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் மீண்டும் திறப்பு