திருச்சி:தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களுக்குப் பக்தர்கள் வழிபடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பார்கள், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பதற்கு என்றென்றும் ஆனந்தமே, ஆமாங்க வருடம் 365 நாள்களும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இத்திருக்கோயிலில் அனைத்து விழாக்களும் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு என்றே சொல்லலாம், அந்த வகையில் தைத்தேர் உற்சவம் கோயிலுக்குள் நடந்துவருகிறது.
உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தைத்தேர் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற வேண்டும், ஆனால் கரோனா தொற்று காரணமாக கட்டுப்பாட்டுடன்கூடிய வகையில் இம்முறை தேரோட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் கடிதம் வெளியாகி இருக்கிறது.