திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளின் ஒருபகுதியாக நேற்று நம்பெருமாள், காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய நம்பெருமாள், இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பின்னர் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு இரண்டாம் புறப்பாடாக கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, சக்கரத்தாழ்வார் சந்நிதியை வந்தடைந்தார். அங்கிருந்து தீபமானது கொண்டு செல்லப்பட்டது.