திருச்சி:தற்போதைய தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அறிக்கையுடன் வரும் 21ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் அந்த 12 பேரில், திலீப், சாமி ரவி, சிவா, சத்யராஜ், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 6 பேரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நவ.19 மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.