திருச்சி மாவட்டம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார் நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமமுக நிர்வாகிகள் சிலர் இன்று (அகஸ்ட்13) அதிமுகவில் இணைந்தனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமமுக திருச்சி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட துணைத் தலைவர் துவாக்குடி குமார் தலைமையில் அக்கட்சியினர் அதிமுகவில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த அமமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்