திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் காயிதே மில்லத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் செயலாளராக ஹைதர் நகரை சேர்ந்த முகமது சலீம் (57) என்பவர் இருந்துள்ளார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடந்த பள்ளி விழாவில் முகமது சலீம் 2ஆம் வகுப்பு படித்த 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி செயலாளருக்கு 5 ஆண்டு சிறை - போக்சோ சட்டம்
திருச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி செயலாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இந்த வழக்கு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக முகமது சலீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குpபதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் முகமது சலீமை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த விசாரணை முடிவடைந்தையடுத்து நீதிபதி வனிதா, முகமது சலீமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.