திருச்சி: ஸ்ரீரங்கம் கீழவாசலை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் ஶ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நாச்சிமுத்து மாதம் மாதம் ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கனரா வங்கிக்கு வருவது வழக்கம், இந்தநிலையில் கடந்த மாத ஓய்வூதிய தொகையை எடுப்பதற்காக நேற்று மதியம் கனரா வங்கிக்கு தனது இருசக்கர வாகனத்தில் நாச்சிமுத்து வந்தார்.
பின்னர் வங்கியிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியின் அருகிலுள்ள தனலட்சுமி சிட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பரை சந்திப்பதற்கு சென்று கொண்டிருந்தார், அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கரத்தில் வந்த மர்ம நபர் அவர் கையில் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார்.