தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மனிதனின் வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் பறித்துக் கொண்டன..!' - பீமாராயா மேத்ரி வருத்தம் - பீமாராயா மேத்ரி

திருச்சி: "மனிதனின் வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் பறித்துக் கொண்டன" என்று, ஐஐஎம் இயக்குனர் பீமாராயா மேத்ரி பட்டமளிப்பு விழாவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா

By

Published : May 5, 2019, 12:17 AM IST

திருச்சி ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரியில் 17ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஐஐஎம் இயக்குனர் பீமாராயா மேத்ரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 236 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரியில் 17ஆவது பட்டமளிப்பு விழா

பின்னர் அவர் பேசும்போது, "மனிதர்களின் மூன்று மில்லியன் வேலைவாய்ப்புகள், ரோபோக்கள் வசம் சென்று விட்டது. அடுத்து நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் ரோபோக்கள் இருக்கும். சொந்தமாக இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால்தான் நமது செயல்பாடுகள் நல்ல முறையில் இருக்கும். அனைவருக்கும் தலைமைப் பண்பு அவசியம். தலைவர்கள் எப்போதும் வித்தியாசமாக இருப்பார்கள். வித்தியாசமாக செயல்படுவார்கள். மாணவர்கள் எப்போதும் திரவத்தை போல இருக்க வேண்டும். எதிர்பார்த்திராத, நினைத்துக்கூட பார்க்காத பணிகளில் சேர வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருப்பவர்களுக்கு தான் வாய்ப்புகள் தேடி வரும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details