தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்பப் பயிற்சி மைதானம் அமைத்து தர அமைச்சரிடம் கோரிக்கை - trichy latest news

தாரநல்லூரில் ஏழை, எளிய மாணவர்கல் பயன்பெறும் வகையில் சிலம்பப் பயிற்சி மைதானம் அமைத்து தர வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலம்பப் பயிற்சி மைதானம் அமைத்துத்தர அமைச்சரிடம் கோரிக்கை
சிலம்பப் பயிற்சி மைதானம் அமைத்துத்தர அமைச்சரிடம் கோரிக்கை

By

Published : Aug 8, 2021, 5:45 PM IST

திருச்சி: திருச்சி ஸ்ரீ அம்மன் சிலம்பம் கூட நிர்வாகிகள் இன்று (ஆக.8) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சிலம்ப விளையாட்டுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியது, சிலம்ப வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கல் அறிவிப்பு, அண்ணா விளையாட்டு அரங்கில் சிலம்பம் விளையாட மைதானம் அமைத்தல், சிலம்ப வீரர்களுக்கு தனி அறை வசதி செய்து தரும் திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிலம்ப மைதானம் அமைத்தல்

மேலும் ஸ்ரீ அம்மன் சிலம்ப கூட நிர்வாகம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில், “3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சியாளர்களை ஸ்ரீ அம்மன் சிலம்ப கூடம் உருவாக்கியுள்ளது. காந்தி மார்க்கெட்டில் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளிகள், கட்டடத் தொழிலாளிகள், ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள், எங்கள் பள்ளியில் சிலம்ப பயிற்சியை மேற்கொள்கின்றார்கள். ஆகையால் இந்த பகுதியில் சிலம்ப விளையாட்டுக்கு என தனி இடம் அமைத்துத் கொடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் கலை நன்மணி ஆசான் என். முத்துகிருஷ்ணன், பயிற்சியாளர் பி. மணிகண்டன், ஐ.முத்துமாரி, சிலம்ப வீரர், வீராங்கனைகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:மைக்கு ஏற்ப பாயிண்டுகள்... உற்சாகத்துடன் நடைபெற்ற தொடுமுறை சிலம்பப் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details