தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராப்பத்து 8ஆம் நாள்: ஸ்ரீரங்கத்தில் வேடுபறி வைபவம் நிகழ்த்திய ரங்கநாதர்!

திருச்சி: ராப்பத்து எட்டாம் நாளில் ஸ்ரீரங்கத்தில் வேடுபறி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்தில் வேடுபறி வைபவம் நிகழ்த்திய ரெங்கநாதர்!
ஸ்ரீரங்கத்தில் வேடுபறி வைபவம் நிகழ்த்திய ரெங்கநாதர்!

By

Published : Jan 1, 2021, 10:43 PM IST

ஸ்ரீரங்கம் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகச் சிறப்புடன் விளங்குகிறது.

இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகல்பத்து நிகழ்ச்சியில் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15்ஆம் தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் 10ஆவது நாளான 24ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றைய சிறப்பு அலங்காரம்

ஸ்ரீரங்கத்தில் வேடுபறி வைபவம் நிகழ்த்திய ரெங்கநாதர்!

இதைத் தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி உற்சவம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 8ஆம் நாளான இன்று (ஜன.1) திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோயில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார்.


வேடுபறி வைபவம்

திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம்

திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தார். இவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி வைபவமாகும். வேடுபறி வைபவத்தின் ஒருபகுதி இன்று நடத்திக்காட்டப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி நிறைவு

நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில்

விழாவின் 10ம் திருநாளான ஜன 3ஆம் தேதி தீர்த்தவாரியும், 4ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

இதையும் படிங்க: மலைமகள் அலைமகள் கலைமகளை போற்றும் 'நவராத்திரி'

ABOUT THE AUTHOR

...view details