மருத்துவர் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்: குழந்தை பலி! - infant dead
திருச்சி: செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததால் உறவினர்கள் ஆரம்ப சுகாதார மையத்தின் முன் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா(22) என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் இல்லாததால் பணியிலிருந்த செவிலியர் ரம்யா, சக செவிலியர் உதவியோடு அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, பவித்ராவிக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அங்கு பிரசவம் பார்ப்பதற்கு போதிய வசதியும், போதிய பயிற்சி இல்லாத செவிலியரும் இருந்ததால் அரைகுறை பிரசவம் பார்த்தால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த சுகாதார மையத்தின் மருத்துவர்கள், செவிலி ரம்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியிறுத்தி அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.