பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஃபிளெக்ஸ்.. திருச்சி:தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேருவின் மகனான தொழில் அதிபர் அருண் நேரு கடந்த 12ஆம் தேதி அன்று பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதற்காக திருச்சியைச் சேர்ந்த திமுகவினர் பலரும் வாழ்த்து தெரிவித்து ஃபிளெக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல இடங்களில் வைத்திருந்தனர்.
குறிப்பாக திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் அதிகமாக ஃபிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் இருந்து முசிறி, நாமக்கல், சேலம், சமயபுரம், பெரம்பலூர், சென்னை, லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியப் பகுதிகளுக்குப் பேருந்துகள் அவ்வழியாக பொது மக்களை ஏற்றிச்செல்கின்றன.
இந்நிலையில், இங்கு ஃபிளெக்ஸ் பேனர்கள் வைத்துள்ளன. நடந்து செல்லும்போது மக்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. பிறந்தநாள் விழா முடிந்து மூன்று நாள்கள் ஆகியும் இன்னும் அகற்றப்படாமல் அங்கேயே இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி இப்படி பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் வைத்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சியினர் சாலையை மறித்தும் சாலை ஓரங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து பேனர் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காயமடைந்த ஆசிரியையை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த திருச்சி கலெக்டர்