மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் இன்று (ஜன.26) விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் விவசாயிகள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர்.
திருச்சியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் கைது
திருச்சி: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் டிராக்டர் பேரணி
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் நெ.1 டோல்கேட் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இந்த பேரணி தொடங்கியது.
இதையும் படிங்க:டெல்லி போராட்டத்தில் வன்முறை...செங்கோட்டையில் ஏறி கொடி நாட்டிய விவசாயிகள்!