தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ கைதி எஸ்கேப்... சிறைக்காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்! - trichy centeral jail

திருச்சி சிறையில் இருந்த போக்சோ சட்டத்தில் கைதான கைதி தப்பித்ததால் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ கைதி எஸ்கேப்... சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்!
போக்சோ கைதி எஸ்கேப்... சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்!

By

Published : Jun 21, 2022, 7:44 PM IST

திருச்சி:போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தீபன்ராஜ், வலிப்பு நோய் காரணமாக கடந்த 9ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று அதிகாலை சிறைக்கைதி தீபன்ராஜ் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து சிறைத்துறை காவலர்கள் திருச்சி காவல் நிலையத்தில் அளித்தப்புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தப்பியோடிய கைதி தீபன்ராஜை திருப்பூரில் சிறைக்காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும் பணியில் அஜாக்கிரதையாக இருந்த சிறைத்துறை காவலர்கள் பிரகாஷ், கோவிந்தராஜன், வினோத் குமார் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜாமினில் வெளி வந்த குற்றவாளிக்கு வரவேற்பு அளித்த 83 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details