மோட்டார் வாகன போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சிஐடியு திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்தச் சங்கத்தின் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,
- மத்திய அரசு கொண்டுவரவுள்ள சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்
- அடாவடி வசூலில் ஈடுபடும் சுங்கச்சாவடியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
- பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்
- வாகன மெக்கானிக், பெயிண்டர், வெல்டர், பிட்டர் என இத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது.