தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வரக்கூடாது'

திருச்சி: அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வரக்கூடாது என்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டுள்ளார்.

'வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வரக்கூடாது'
'வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வரக்கூடாது'

By

Published : Apr 10, 2020, 12:49 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான மருத்துவமனை செல்வதற்கு, காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே செல்லலாம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் சிலர் வெளியே வர அனுமதிப்பதை தவறாக பயன்படுத்திக்கொண்டு, மாநகரின் பல்வேறு இடங்களில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வரதராஜூ தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து காவல் ஆணையர் வரதராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,"மாநகர் முழுவதும் இன்று காலை முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டுவருகிறது. தற்போதுவரை 295 இருசக்கர வாகனங்கள், 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 11 இடங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் மளிகைக் கடைகள் உள்ளன. எனவே இனிமேல் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க, தங்களது வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவம் தொடர்பாக செல்வோருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:சமூக விலகல் பின்பற்றப்படுகிறதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details