திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோடுமேன் மணிவாசகம் (21). இவர் நேற்றிரவு (மே.4) மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த அடையாளம் தெரியாத நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் மணிவாசகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - குற்றச் செய்திகள்
திருச்சி: பொன்மலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இளைஞர் வெட்டிக் கொலை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்மலை காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிவாசகத்தை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.