திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், கைலாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். பலூன் வியாபாரியான இவருக்கு தமிழ்செல்வி(12), ஜான்சி(13) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சிறுமிகள் இருவரும் கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளனர். மகள்கள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார். ஆனாலும் சிறுமிகள் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது பிள்ளைகளை கண்டுபிடித்து கொடுக்க கோரி காந்திமார்கெட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பலூன் வியாபாரியின் இரண்டு பெண் பிள்ளைகள் மாயம் - balloon
திருச்சி : மயாமான தனது மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி மாநகர ஆணையரிடம் பலூன் வியாபாரி ஒருவர் மனு அளித்துள்ளார்.
பலூன் வியாபாரி ஒருவர் மனு
புகார் அளித்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ரமேஷ் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து தனது மகள்களை கண்டுபிடித்து கொடுக்க கோரி புகார் மனு அளித்தார். புகார் மனுவை ஏற்ற ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இரண்டு சிறுமிகள் மாயமான சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.