தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய்க்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கோலாகலம் செய்த திருச்சி குடும்பம்! - Pet

திருச்சியில் முருகன் வள்ளி தம்பதியினர் தாங்கள் செல்ல பிராணியாக வளர்க்கும் இரு நாய்க்குட்டிகளுக்கு 1 வயது நிறைவடைந்ததையொட்டி பிறந்தநாள் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

செல்லப் பிராணிக்கு பிறந்தநாள்
செல்லப் பிராணிக்கு பிறந்தநாள்

By

Published : Dec 19, 2022, 1:23 PM IST

திருச்சி: தென்னூர் காமராஜ் நகரில் வசிக்கும் முருகன், வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் இரண்டு நாய்க்குட்டிகள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். அதில் ஆண் நாய்க்குட்டிக்கு (ஹிட்டு) மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு (சார்வி) எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை தங்கள் பிள்ளைகள் போல வளர்த்து வருகின்றனர்.

மேலும் ஹிட்டு, சார்வி எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளும் குடும்பத்தினரிடமும், வீட்டிற்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களிடமும் பாசத்துடன் பழகும் தன்மை கொண்டதாகும். இந்நிலையில் நேற்று (18ஆம் தேதி) நாய்க்குட்டிகளுக்கு 1 வயது நிறைவடைந்ததையொட்டி முருகன் குடும்பத்தினர் செல்ல பிராணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

தன் பிள்ளைகளைப் போலச் செல்லப்பிராணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடியது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடையே வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட காவலர் கைது

ABOUT THE AUTHOR

...view details