தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலைக்கு காவி சாயம்! - திருச்சி பெரியார் சிலை

திருச்சி: சமத்துவபுரத்தில் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரியார் சிலைக்கு காவி சாயம்
பெரியார் சிலைக்கு காவி சாயம்

By

Published : Sep 27, 2020, 7:26 AM IST

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம் புதூர் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரத்தின் அருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று(செப் 26) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பெரியார் சிலைக்கு காவி சாயத்தை பூசியுள்ளனர். தகவலறிந்த பெரியார் இயக்க தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. காவி சாயம் பூசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: பெரியார் சிலையின் பக்கத்திலேயே பாஜக கொடி

ABOUT THE AUTHOR

...view details