தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம் செய்த மகளை அடித்து இழுத்துச் செல்லும் பெற்றோர்! - Coimbatore news

கோவை: சாதி மறுப்புத் திருமணம் செய்த மகளை பெற்றோர் அடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி, தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி மறுப்புத் திருமணம்  கோவைச் செய்திகள்  இடையர்பாளையம்  Coimbatore news  Coimbatore couples
மகளை அடித்து இழுத்துச் செல்லும் பெற்றோர்

By

Published : Jun 21, 2020, 7:29 PM IST

Updated : Jun 21, 2020, 8:38 PM IST

கோவை மாவட்டம், இடையர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும்; திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி தமிழினி பிரபா என்பவரும் கோவையில் கடந்த 5ஆம் தேதி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்குப் பெண்ணின் வீட்டார் சம்மதிக்காத நிலையில், இருவரும் கார்த்திகேயன் வீட்டில் தங்கியிருந்தனர்.

இவர்கள் தங்களது திருமணத்தை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், பெண்ணின் வீட்டார் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்து கார்த்திகேயனையும்; அவரது தாயாரையும் மிரட்டிவிட்டு, சக்தி தமிழினி பிரபாவை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

மகளை அடித்து இழுத்துச் செல்லும் பெற்றோர்

இதுகுறித்து கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சக்தி தமிழினி பிரபாவை, அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் திருச்சி சென்று, சக்தி தமிழினி பிரபா எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

Last Updated : Jun 21, 2020, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details