ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.
29 மணி நேரம் மீட்புக்குழுவினர் எட்டுக் கட்டமாக குழந்தையை மீட்க செய்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ராட்சத இயந்திரமான ரிக் இயந்திரம் மூலம் ஒரு மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழிதோண்ட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், கிணற்றில் விழுந்த குழந்தை 100 அடிக்கும் கீழே சென்றுவிடாத வகையில் ஏர் லாக் மூலம் அவனது கை லாக் செய்யப்பட்டுள்ளது.