தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டியிடம் செயின் பறித்த பெண்ணை மடக்கிப் பிடித்த காவலர்! - manapparai

திருச்சி: மணப்பாறை பேருந்து நிலையத்தில் தனது பேரக்குழந்தைகளுடன் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டியிடம் செயின் பறித்த பெண்ணை பெண் காவலர் மடக்கிப் பிடித்தார்.

மூதாட்டியிடம் செயின் பறித்த பெண்ணை மடக்கிப் பிடித்த பெண் காவலர் !!

By

Published : Jul 13, 2019, 10:58 PM IST

மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருபவர் ஆராயி(60). இவர் தினமும் தனியார் பள்ளியில் பயிலும் தனது பேரக்குழந்தைகளை பேருந்தின் மூலம் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம்.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தனது பேரக் குழந்தைகளுடன் பேருந்தில் ஏற முயன்ற ஆராயிடம்(60) அருகில் நின்ற பெண் உதவி செய்வது போல நடித்து கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.

மூதாட்டி உடனடியாக கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை விரட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வர முயன்றபோது, வெளியே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போக்குவரத்து காவலர் தப்பிக்க முயன்ற பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளார்.

மணப்பாறை பேருந்து நிலையம்

இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details