திருச்சி மாவட்டம் வளநாடு அருகேயுள்ள மினிக்கியூர் பகுதி ஆற்று ஓடைகளில் மணல் கொள்ளை நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுடுத்து டிஐஜி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மினிக்கியூர் பகுதியில் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரிகளை மடக்கி பிடித்து, ஓட்டுநர்களிடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அப்பகுதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் பெருமாள்(55) உள்பட திருப்பதி, சதாசிவம், ரவிச்சந்திரன், தனபால், குமரேசன், ராசு, சங்கன், சதீஷ்குமார் உள்ளிட்ட்டோர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.