தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலம்பாட்டத்தில் புதிய உலக சாதனை முயற்சி! - silambattam

திருச்சி: 300 சிலம்பாட்ட வீரர்கள் சேர்ந்து 12மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

திருச்சி

By

Published : May 1, 2019, 10:27 PM IST

திருச்சி தில்லைநகர் கிஆபெ விசுவநாதன் மேல்நிலைப்பள்ளியில் "எய்ம் டூ ஹய் டிரஸ்ட்" சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காலை 5 மணி முதல் மாலை 5மணி வரை 300 சிலம்பாட்ட வீரர்கள் இணைந்து 12 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.


இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 50 வயது வரையிலான சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். காலையில் பத்து வயது சிலம்ப வீராங்கனை சுகிதா தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒருமுறைக்கு 45 வீரர்கள் என சுழற்சி முறையில் இதில் கலந்துகொண்டனர்.

சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை முயற்சி

இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து நடுவர்கள் பங்கேற்று இதனை கண்காணித்தனர். தொடர்ந்து மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் உலக சாதனை முயற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details