தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சுஜித் மீட்கப்படாததற்கு சரியான திட்டம் இல்லாததே காரணம்' - கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

திருச்சி : சுஜித் மீட்கப்படாதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.

mp-jothimani

By

Published : Oct 29, 2019, 5:06 PM IST

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த மீட்புப் பணியில் ஐந்தாவது நாளான இன்று 88அடி ஆழத்திலிருந்து சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், "சுஜித் உயிருடன் மீட்கப்படாததற்கு சரியான திட்டம் இல்லாததே காரணம். இங்கு, அமைச்சர்கள், அலுவலர்கள், மக்கள் என அனைவருமே நல்ல நோக்கத்துடனே பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.

ஆனால் தேசிய பேரிடர் மீட்புக்குழு தாமதமாக வந்தது, சரியான திட்டம் இல்லாதது, முறையான தொழில்நுட்பம் இல்லாததுமே குழந்தை மீட்கப்படாததற்கு முக்கியக் காரணம்.

கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி

மேலும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் தனித்துவமான கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:
மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details