தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் ஜோதிமணி எம்.பி. கலந்துகொண்ட நிகழ்ச்சி - தாயும், சேயும் மணிக்கணக்கில் காத்திருந்த அவலம் - அரசு மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவமனையில் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தாயும், சேயும் மணிக்கணக்கில் காத்திருந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Apr 28, 2022, 5:34 PM IST

திருச்சி:மணப்பாறை விராலிமலை சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் (ரோட்டரி கிளப்) சங்கம் சார்பில் கடந்த 26ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, ஆர்டிஓ சிந்துஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சிசேரியன் மற்றும் சுகப்பிரசவமாகி தாய், சேய் நலப்பிரிவில் இருந்த தாய்மார்கள், அவர்களது பச்சிளம் குழந்தைகளுடன் வரவழைக்கப்பட்டு, மேடை முன்பு அமர வைக்கப்பட்டிருந்தனர்.

ஜோதிமணி எம்.பி.

அந்நிகழ்ச்சியின்போது சில குழந்தைகள் அழத்தொடங்கியதால் அதன் தாய்மார்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சீமாங் என்னும் தாய் சேய் நலப்பகுதிக்குச்சென்றனர். பொதுவாக பிறந்து இரண்டு, மூன்று நாள்களே ஆன குழந்தைகளுக்கு விரைவில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க சீமாங் பிரிவு பகுதிக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை.

பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

அவ்வாறு இருக்க தற்போது மீண்டும் கரோனா பரவல் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் உள்ள அரசு மருத்துவமனை நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் நீண்ட நேரம் புறவெளியில் அமர வைக்கப்பட்டிருந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதில் பொறுமையிழந்த சில தாய்மார்கள் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினர்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கரோனா... மொத்தம் 171 பேருக்கு உறுதி...

ABOUT THE AUTHOR

...view details