தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்னிபாத் திட்டம்: எழுத்துத்தேர்வில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு எழுதினர்.

By

Published : Nov 13, 2022, 3:12 PM IST

அக்னிபாத்
அக்னிபாத்

திருச்சி: இந்திய ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ”அக்னிபாத்” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆண்டுதோறும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உடற்தகுதித்தேர்வு நடைபெற்ற நிலையில், திரளான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திருச்சி நேஷனல் கல்லூரியில் அடுத்தகட்ட எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டங்களைச்சேர்ந்த 2ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழுத்துத்தேர்வில் கலந்து கொண்டனர்.

அக்னிபாத் திட்டம்: எழுத்துத்தேர்வில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

முடிவுகள் வெளியானதும் அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வான் சாகசத்தில் விபரீதம் - விண்ணில் வெடித்து சிதறிய போர் விமானங்கள்!

ABOUT THE AUTHOR

...view details