கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதை முன்னிட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களுக்கு சித்த மருந்து பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடிய இந்த சித்தா மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று (மே 31) நடைபெற்றது.
திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் சித்தாப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகரப் பொறியாளர் அமுதவல்லி, உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடிப் பகுதியிலுள்ள மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சித்த பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இரு கோட்ட அலுவலகங்களிலும் காய்கறி விற்பனை வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:’முதல் நாளே சித்த மருத்துவத்தை நாடுங்கள், ரெம்டெசிவிருக்காக காத்திருப்பதைத் தவிர்க்கலாம்’