திருச்சி:திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி, மருத்துவர் மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் 'கையெழுத்து இயக்கம்' நடத்தப்பட்டது. இதனை சென்னையில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதேபோல, திருச்சியில் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நீட் தேர்வுக்கு எதிராக குரல் வேண்டும் எனக் அமைச்ச அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இட ஒதுக்கீடாக இருந்தாலும், இந்தி எதிர்ப்பாக இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டமாக இருந்தாலும், நமது தமிழ்நாடு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதில் எப்பொழுதும் முதல் குரல் கொடுக்கும். கடந்த மாதம் நடந்த உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தாலும் சரி, கையெழுத்து இயக்கமாக இருந்தாலும் சரி அது சார்ந்த சட்டப்போராட்டத்திலும் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது, 15 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர முடியும். எல்லா வீட்டிற்கு விளக்கு கொண்டுவர முடியும் என மக்களிடம் கேட்டது போல நீட் தேர்வுக்கான விலக்கையும் பெற்று தருவோம். ஏற்கனவே, நீட் விலக்கு குறித்து நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம் ஆளுநர் மாளிகையில் தூங்கிக் கொண்டிருந்தது.