திருச்சி: மணப்பாறை அருகே புத்தாநத்தம் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்.,' முதலமைச்சர் உத்தரவுப்படி ரேசனில் தரமற்ற அரிசி வழங்கினால் திருப்பிக்கொடுத்துவிட்டு எங்களிடம் புகார் அளியுங்கள். சரி செய்து கொடுக்கப்படும். எதையும் பூசி முழுகும் வேலை இந்த ஆட்சியில் கிடையாது.
எதுவாக இருந்தாலும் நாங்கள் திருத்திக் கொள்கிறோம். அதற்காகத்தான் நீங்கள் ஓட்டுபோட்டீர்கள். இது அனைவருக்குமான ஆட்சி. சிறந்த முதலமைச்சருக்கான பட்டியலில், 4ஆவது இடத்தில் பாண்டிச்சேரியும், 3ஆவது இடத்தில் கேரளாவும், 2ஆவது இடத்தில் அஸ்ஸாமும்,முதல் இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் உள்ளனர்.
வாக்குரிமை உள்ள மற்றும் வாக்குரிமையற்ற மக்களுக்காகவும் சேர்த்து உழைப்பவர், முதலமைச்சர்' எனப் பேசினார்.