தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும்: மேதாக் பட்கர் - Methak Patkar

திருச்சி: தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் வெளிநாட்டிலிருந்து கப்பலில் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்படும் என சூழலியல் போராளி மேதா பட்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணீர் பிரச்னை

By

Published : Jun 22, 2019, 11:53 PM IST

திருச்சியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சூழலியல் போராளி சூழலியல் போராளி மேதா பட்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தண்ணீர் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வெளிநாடுகளில் இருந்து கப்பலில் தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேதா பட்கர் செய்தியாளர் சந்திப்பு

கேரள அரசு கொடுக்க முன்வந்த தண்ணீரை தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. வேறு கட்சி ஆட்சி நடக்கிறது என்பதால் இந்த முடிவை தமிழ்நாடுஅரசு எடுத்துள்ளது. மக்களின் தண்ணீர் பிரச்னையில் அரசியல் பார்க்கக்கூடாது. நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.போராட்டங்கள் அமைதியாக நடந்து வருகிறது. ஆனால் அரசு அவற்றை தீர்க்க முன்வரவில்லை.

தேர்தலில் மக்களின் பிரச்னைகள் குறித்து யாரும் எடுத்துக் கூறவில்லை. தற்போது நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 93% சதவிகித அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற தொழிலாளர்களாகத் தான் உள்ளனர்.

சூழலியல் போராளி முகிலன் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் கடத்தப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details