கடந்த 21ஆம் தேதி 2019ஆம் ஆண்டுக்கான ஆசிய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி ஹாங்காங்கில் துவங்கியது. இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையில் ஓட்டுநராக பணிபுரியும் மணிமாறன் (45) 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற மணிமாறனுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி: ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் மணிமாறனுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதில் இவர் 2ஆவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு முதன்முறையாக மணிமாறன் இன்று திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதிக்கு என் வாழ்த்துக்கள். ஹாங்காங்கில் நான் பெற்ற இந்த வெற்றி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு பெற்ற முதல் வெற்றி. வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான உடற்பயிற்சி கூட நண்பர்களுக்கும், எனது குடும்பத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.