தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல் துறையாக உள்ளது' - ஜோதிமணி கடும் தாக்கு - மணப்பாறை

திருச்சி : மணப்பாறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல் துறையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளார்.

ஜோதிமணி

By

Published : Apr 4, 2019, 12:00 PM IST

Updated : Apr 4, 2019, 12:56 PM IST

கரூர் நாடாளுமன்றதொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிமணி, 'கரூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. எனவே, எல்லா கிராமத்திற்கும் தரமான குடிநீர் வழங்குவதை இலக்காக வைத்துள்ளோம். தோல்வி பயம் தெரிவதால் தம்பிதுரை மிகவும் கீழ்த்தரமான செயலை செய்து வருகிறார்.

ஜோதிமணி

இதற்காக நாங்கள் துக்கப்படமாட்டோம், துயரப்படமாட்டோம், நிச்சயமாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை தோற்கடிப்பேன். இந்த தேர்தலுடன் தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க இருக்கிறது. அதனால்தான் அவர் வாக்கு கேட்டு செல்லும் இடத்தில் மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அரசு சார்பில் கொண்டு வரவேண்டிய கல்லூரிகளுக்கு பதிலாக தனக்கு சொந்தமாக 45 கல்லூரி, ஒரு வேளாண் கல்லூரி மற்றும் ஒரு மெடிக்கல் கல்லூரிகளை கட்டி முடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கரூர் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல்துறையாக செயல்படுகிறது.

புதுச்சேரி உட்பட 40 தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. இதைச் சொல்ல நான் வருத்தப்படுகிறேன்' என்று அவர் கூறினார்.

Last Updated : Apr 4, 2019, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details