தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் சடலமாக மிதந்த இளைஞர் மீட்பு - manapparai

திருச்சி: மறைப்பாறை அருகே இளைஞர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் சடலமாக மிதந்த இளைஞர் மீட்பு

By

Published : Jul 5, 2019, 9:56 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பனூர் கிராமத்தில் உள்ள கிணற்றில், இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. கூடுதல் விசாரணையில், பாண்டியனுக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த திருமணப் பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், கடந்த 2ஆம் தேதி அந்தப் பெண்ணின் கணவர், பாண்டியனிடம் தகராறில் ஈட்டுபட்டதும் தெரியவந்தது.

மேலும், அன்றைய தினத்தில் இருந்து அவர் மாயமானதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையறிந்த பாண்டியனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details