சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த காளி, பாஸ்கர் உள்பட ஐந்து பேர் சொகுசு கார் ஒன்றில் வியாபார விஷயமாக மதுரை சென்றுகொண்டிருந்தனர். வாகனம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இருங்கலூர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் உருண்டு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காரில் இருந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்! - தீயணைப்புத் துறையினர்
திருச்சி: திருச்சி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இதில், பயணம் செய்த ஐந்து பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனத்தில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குறைந்த விலைக்கு கைப்பேசி; ஓ.எல்.எக்ஸ் மோசடி செய்து சிக்கிய இளைஞர்!