திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள பச்சப்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகில் தேநீர் கடை நடத்திவருகிறார். தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் உள்பட எந்தக் கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.
இந்நிலையில் இவர் மதுபாட்டில்களை வாங்கி தனதுதேநீர் கடையில் முறைகேடாக பதுக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஊரடங்கு காலத்தில் முருகேசனும், அவரது மருமகன் பாலசுப்ரமணியனும் சேர்ந்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த தகவலறிந்து அங்கு வந்த பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படைக் காவல்துறையினர் அதிரடியாகச் சோதனையிட்டனர்.