தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ராகுல் காந்தி காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்’ - எல். முருகன் - ராகுல் காந்தி காஷ்மீர் பயணம்

ராகுல் காந்தி காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விடும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த முருகன்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த முருகன்

By

Published : Sep 24, 2022, 3:47 PM IST

திருச்சி: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சி வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். இதனிடையே திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இரண்டு நாட்களாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக, இந்து முன்னணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்கு கடுமையான தண்டனையை அரசு வழங்க வேண்டும்.

என்ஐஏக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை குறித்து பேசக்கூடிய அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்பந்தமானது 2018ஆம் ஆண்டு ரூ. 1664 கோடி திட்ட மதிப்பில் போடப்பட்டது. இந்த நிதிக்கான ஒப்புதல் இந்த மாதம் 22ஆம் தேதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும்.

ஆ. ராசாவின் கருத்திற்கு பாஜகவின் பட்டியிலின‌ அணி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாராக இருந்தாலும் பதில் சொல்லலாம். இது திமுகவின் வெற்று விளம்பரத்திற்கான பேச்சாக உள்ளது‌. வேல் யாத்திரையை பாஜக நடத்திய போது மு.க. ஸ்டாலினும் வேல் தூக்கினார். ராகுல் காந்தியின் நடை பயணம் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்தது உள்ளது. அவர் கேரளாவிற்க்குள் நுழைந்து நடை பயணத்தில் இருக்கும் போதே கோவா காங்கிரஸ் கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர் காஷ்மீர் சென்று அடைவதற்குள் ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் இல்லாமல் போய்விடும்.

திருச்சி வானொலி நிலையம் இடமாற்றம் செய்வதாகவும், வானொலி நிலையம் மூடப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரபரப்பட்டு வருகிறது. அது உண்மையல்ல‌. ஆ. ராசாவிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது.

செய்தியாளர்களைச் சந்தித்த முருகன்

சர்ச்சை பேச்சை பேசிய வரை விட்டுவிட்டு அதை எதிர்த்து கேள்வி கேட்டவர் மீது வழக்குப் பதிவு செய்வது‌ கண்டனத்திற்குரியது என்றார்.

இதையும் படிங்க:கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்...

ABOUT THE AUTHOR

...view details