தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையே காரணம்' - கார்த்தி சிதம்பரம் - h.raja

திருச்சி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சி காரணம் இல்லை என்று சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

karthi
karthi

By

Published : Dec 18, 2019, 9:18 AM IST

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம் கொண்டுவர வேண்டிய ஒன்றுதான். ஆனால், இதை குற்றமாக மாற்றியுள்ளனர். இது இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் செயலாகும்.

தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இத்தகைய மத்திய அரசின் நடவடிக்கை மூலம் ஹிட்லர் ஆட்சியைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகிறது. ஹிட்லரும் கூட்டணிக் கட்சிகளின் தலைமையுடன் தான் ஆட்சிக்கு வந்தார். பின்னர் சர்வாதிகாரியாக மாறினார். இதே போன்ற நிலையை இந்தியாவில் ஏற்படுத்த தான் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதை எதிர்த்து தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இருந்து அதிமுக மாறுபட்டு சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் வாக்குகள் அடிப்படையில் இந்த மசோதாவைத் தோற்கடிக்க முடியாது. அதனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்.

செய்தியாளர் சந்திப்பில் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் காரணமல்ல - கார்த்தி:

இலங்கையில் நடந்தது இனப் போராட்டம். இதை நிறுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராஜபக்சவும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையையும் தான் காரணம். அங்கு நடந்த போரின் காரணமாக தான் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்' என்றார்.

ஹெச்.ராஜாவை கலாய்த்த கார்த்தி

தொடர்ந்து 'உங்களது தந்தை ப. சிதம்பரமும், நீங்களும் சிறை செல்வீர்கள்' என்று ஹெச்.ராஜா கூறியது குறித்த கேள்விக்கு? கார்த்தி சிதம்பரம் பதில் கூறுகையில், 'ராஜாவிடம் 33 22 44 என்ற எண்களை மட்டும் கூறுங்கள். அவர் புரிந்து கொள்வார்' என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details