தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தித் திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

திருச்சி:மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருவது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

kamal haasan

By

Published : Jun 1, 2019, 2:18 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

கமல்ஹாசன் பேட்டி

அதற்கு பதிலளித்த அவர், ”நான் இந்தி படங்களில் எல்லாம் நடித்தவன். இந்தியா அவரவர் மொழியை மதிக்கும் என்ற நம்பிக்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எதையும் திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து, விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்வார்கள். தமிழர்கள் தன் மொழியை விட்டுக்கொடுத்து பிற மொழியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மொழியை திணிக்கக் கூடாது என்பதை தமிழர்கள் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details