திருச்சி சிவானி பொறியியல் கல்லூரியின் தலைவர் தலைமையில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் திருச்சி பிராந்திய துணை பொது மேலாளர் சுவாமிநாதன் கலந்துகொண்டு 175 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
சிவானி பொறியியல் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா - சிவானி பொறியியல் கல்லூரி
திருச்சி: "இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் கூட வேலையின்றி சுற்றித்திரியும் அவலம் உள்ளது" என்று, இந்தியன் வங்கியின் மேலாளர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "வாழ்க்கையில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். நோக்கமும், இலக்கும் இல்லாத காரணத்தால் இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் கூட வேலை இன்றி சுற்றித்திரியும் அவலம் உள்ளது. திட்டமிடாததும், முயற்சி செய்யாததும்தான் பலரது தோல்விக்கு காரணமாக உள்ளது. தவறுகள் செய்வதன் மூலமே அனுபவம் பெறமுடியும். அதனால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் எப்போதும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடாது. நமது அறிவுத்திறன் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டும்" என்றார்.