தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 20, 2020, 7:54 PM IST

ETV Bharat / state

65 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் சங்கமித்த விளையாட்டுப் போட்டிகள்!

திருச்சி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக மாநகர அரசுப் பள்ளிகளுக்கு இடையிலான ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்

Inter School sports competition at Trichy
Inter School sports competition at Trichy

திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், திருச்சி நகர தொடக்கக் கல்வித் துறை, திருச்சி மாநகராட்சி ஆகியவை சார்பில் 'ஆடுகளம் 2020', என்ற பெயரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக மாநகரப் பள்ளிகளுக்கு இடையிலான ஒன்றிய அளவிலான ஐந்தாம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் இன்றுமுதல் நாளைவரை நடைபெறவுள்ளது.

இதில், திருச்சி மாநகரில் உள்ள 65 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோ - கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெறும் 250 மாணவ, மாணவிகளுக்கு நாளை பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் சங்கமித்த விளையாட்டுப் போட்டிகள்!

போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்கவிடப்பட்டன. போட்டிகளை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் சமீர் பாஷா தொடங்கிவைத்தார்.

இதில், வட்டாரக் கல்வி அலுவலர் அருள்தாஸ் நேவிஸ், வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, திருச்சி மெட்ரோ ரோட்டரி தலைவர் இளங்கோவன், இன்னர் வீல் சங்கத் தலைவர் கல்யாணி, செயலாளர்கள் ஜெகநாத், திருச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:உணவகத்தில் சண்டை... ஹாக்கி வீரர் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details