பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி உறையூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெசவாளர் அணியின் மாநில தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சண்முகராஜ் சிறப்பு வழிகாட்டியாக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அனைத்து நெசவாளர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வலியுறுத்தல் - பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் பிரிவு
திருச்சி: அனைத்து நெசவாளர்களுக்கும் தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க வேண்டும் என்று பாஜக நெசவாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெசவாளர் அணியின் மாநில மாநாட்டை மதுரை அல்லது திருப்பூரில் நடத்த வேண்டும்.
- மத்திய அரசு வழங்கும் தேசிய நெசவாளர் அடையாள அட்டை அனைத்து நெசவாளர்களுக்கும் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நெசவாளர் அணியில் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- "விவசாயி நண்பன் மோடி" என்ற நிகழ்ச்சியை நெசவாளர் அணி சார்பில் முழு ஒத்துழைப்புடன் நடத்த வேண்டும்.
- எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க நெசவாளர் அணியை தயார்படுத்த வேண்டும், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி நெசவாளர் பிரிவின் அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.