தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை! - Trichy Junction

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் மோப்ப நாய் கொண்டு அதிரடி சோதனையை நடத்தினர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அதிரடி சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அதிரடி சோதனை

By

Published : Aug 14, 2023, 1:03 PM IST

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை!

திருச்சி: இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை,கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வதால் ரயில்நிலையம் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும்.

இந்நிலையில் நாளை (ஆகஸ்ட்15) நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இந்தியா முழுவதும் பொதுப் போக்குவரத்து காரணிகளான ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க:வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து...

இது தொடர்பாக ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் திருச்சி ரயில்வே நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், இன்று (ஆகஸ்ட்14) மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் 100 க்கும் மேற்பட்ட ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் உடமைகளை சோதனை செய்தனர்.

மேலும் வாகனம் நிறுத்துமிடங்கள், ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனையை மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து குற்றங்களை தடுக்கும் வகையில் ரயில் மற்றும் வாகன நிறுத்தும் இடம், ரயில்வே நடைபாதை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

மேலும் சோதனையில் உரிமை கோரப்படாத பொருட்கள் ஏதேனும் ரயில் நிலையத்தில் காணப்பட்டால் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே காவல்துறையினர் 600 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்போர்க் பயன்படுத்தும் செல்போன் இதுவா? இணையத்தை கலக்கும் செல்போனின் தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details