தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகரிக்கும் கரோனா; அதிர்ச்சியில் திருச்சி மக்கள்! - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: ஒரே நாளில் 83 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 886ஆக உயர்ந்துள்ளது.

Increasing corona; Trichy people in shock!
Increasing corona; Trichy people in shock!

By

Published : Jul 5, 2020, 5:02 AM IST

கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 4,280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில் 2,214 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியும், 65 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.07 லட்சத்தைக் கடந்துள்ளது. அதில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 60,592 ஆகவும், 44,956 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1,450 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் திருச்சியில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில் 83 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 886ஆக அதிகரித்துள்ளது. இதில் 463 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியும், 419 பேர் சிகிச்சைப் பெற்றும் வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் நான்கு பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details