திருச்சி: கே.கே நகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி இவர் வீடுகளில் படுக்கையில் கிடக்கும் நோயாளிகளை கவனிக்கும் செவிலியர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் நடத்தி வருவதாக ஆரோக்கியசாமி என்பவர் செல்விக்கு அறிமுகமாகி, அரசு அதிகாரிகள் பலரை நன்கு தெரியும் எனவும் இதன் மூலம் செல்விக்கு சத்துணவுத் துறையில் சத்துணவு பணியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன் பின் அவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 1 லட்சம் பெற்றுள்ளார். மேலும் இதே போல் செல்வியின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் கிளர்க் மற்றும் தலையாரி வேலை வாங்கித் தருவதாக 6-பேரிடம் ரூபாய் 1 லட்சம் பெற்றுக் கொண்டார். இரண்டு வருட காலம் ஆகியும் வேலை வாங்கித் தராததால் செல்வியை அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பணத்தைக் திருப்பி தரும்படி கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆரோக்கியாமிடம் செல்வி சென்று கேட்டதற்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.